தமிழ்நாடு

tamil nadu

சோழபுரத்தில் குற்றவாளி அதிரடி கைது

ETV Bharat / videos

சோழபுரத்தில் குற்றவாளி அதிரடி கைது - நீதிமன்ற வழிகாட்டுதல்களை காற்றில் பறக்கவிட்ட‌தா காவல் துறை? - சோழபுரத்தில் குற்றவாளி கைது

By

Published : Feb 9, 2023, 11:06 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கவேலி கிராமத்தில் இரட்டை கொலை சம்பவம் நடந்தது. இதில் குற்றவாளியாக உள்ள ராஜேஷ் தற்போது நீதிமன்ற பிணையில் வந்துள்ளார். இந்நிலையில் இவர் கஞ்சா வைத்திருப்பதாக சோழபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, சோழபுரம் காவல் துறையினர் கடந்த 6ஆம் தேதி துலுக்கவேலி கிராமத்திற்கு சென்று அங்கு வீட்டிலிருந்த ராஜேஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேஷின் தம்பி நரேஷ் தனது கையில் பிளேடால் கிழித்துக் கொண்டார். 

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்யும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும் காவல் துறையினர் அந்த அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க:கடலில் வீசப்பட்ட தங்க குவியல்.. நடுக்கடலில் சிக்கிய கடத்தல் கும்பல்..!

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details