'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனத்தை மழலை மொழியில் பேசிய குழந்தை - குடியரசு தின விழா
சென்னை உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற 74ஆவது குடியரசு தின விழாவில் ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள், காவலர் பதக்கம் உள்ளிட்டப் பதங்களை வழங்கினார்.
இதில் காவலர் பதக்கம் பெற்ற காவலர் சகாதேவனின் தங்கை மகள் ஜனனி (வயது 3), வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனத்தை தன்னுடைய மழலை மொழியில் பேசியது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இது குறித்து ஜனனியின் பெற்றோர், ”தமிழ் மீதும் தமிழ்மொழி மீதும் எங்களுக்கு அதிக நம்பிக்கையும் அதிகப்பற்றும் உள்ளது. தற்போது தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து, யாருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக எங்கள் குழந்தைக்கு தமிழ் மொழியின் சிறப்பு குறித்து சொல்லி வருகிறோம். மேலும், கட்டபொம்மன் வசனம், உள்ளிட்டவற்றை சொல்லிக் கொடுத்து வருகிறோம். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர்.