முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருவண்ணாமலையில் அன்னதானம்
திருவண்ணாமலை:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கருணாநிதியின் வெண்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் திமுகவின் தலைவராகவும், 6 முறை முதலமைச்சராகவும் இருந்த கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி நேற்று (ஆகஸ்ட்7) திமுகவின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அண்ணா நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டு உள்ள கலைஞரின் வெண்கல திருவுருவ சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நினைவு நாளையொட்டி அன்னதானமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை மற்றும் எலுமிச்சை சாதம் ஆகியவற்றை, அமைச்சர் எ.வ. வேலு பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று அன்னதானம் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் லெனின் ரெட்சகநாதன் காலமானார்!