தமிழ்நாடு

tamil nadu

Chennairains

ETV Bharat / videos

Chennai Rains: மழைநீர் தேங்கியதால் கிண்டி கத்திப்பாராவில் போக்குவரத்துக்குத் தடை; தானியங்கி மோட்டாரை சரி செய்ய கோரிக்கை

By

Published : Jun 19, 2023, 11:21 AM IST

சென்னை: தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் தாம்பரம், ஆலந்தூர், கிண்டி, பல்லாவரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் பரவலாக நேற்று இரவு முதல் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் முழுமையாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதனால் வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கத்திப்பாரா சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மின் மோட்டார், சுமார் ஒரு அடி உயரத்தில் மழை நீர் தேங்கினால் உடனடியாக தானாக இயங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த மோட்டார் பொருத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை செயல்படவில்லை. மழை பெய்தால் உடனடியாக இந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யும் நிலையில் உள்ளதால், இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் கத்திப்பாரா சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மின் மோட்டாரை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை; காரணம் என்ன..?

ABOUT THE AUTHOR

...view details