தமிழ்நாடு

tamil nadu

ஹாரன் அடித்ததால் லாரி ஓட்டுனருக்கு சாரமாரி அடி-வண்டலூரில் பரபரப்பு!

ETV Bharat / videos

ஹாரன் அடித்ததால் லாரி ஓட்டுனருக்கு சரமாரி அடி-வண்டலூரில் பரபரப்பு! - tamil news today

By

Published : Aug 16, 2023, 4:46 PM IST

சென்னை:வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாக ரமேஷ் (48) என்பவர் லாரியை மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி ஒட்டி வந்துள்ளார். அப்போது வரதராஜபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த லாரியை நிறுத்தியுள்ளார்.அப்ப்போது ஏற்கனவே சுங்க கட்டணம் செலுத்துவதற்காக தனியார் பேருந்து 10 நிமிடத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தது. இதனால் பேருந்து பின்னால் நின்று கொண்டு இருந்த லாரி ஓட்டுனர் ரமேஷ் ஹாரன் அடித்துள்ளார்.

இதை கேட்டு ஆத்திரம் அடைந்த சுங்கச் சாவடியில் பணிபுரியும் ஊழியரான கோகுல் (25) என்பவர் லாரி ஓட்டுநரை முதலில் தாக்கி விட்டு  தகாத வார்த்தையால் திட்டி லாரி ஓட்டுநரை காலால் உதைத்துள்ளார் மேலும் உடன் பணிபுரியும் சக ஊழியர்களும் லாரி ஒட்டுனரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ரமேஷ் இச்சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோகுலை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும்  லாரி ஓட்டுநரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details