சென்னையில் குப்பைக் கொட்ட வந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு!
சென்னை நங்கநல்லூர் பாலாஜி நகர் 10ஆவது தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (75) என்பவரின் மனைவி ராதா (70). இவர், நேற்று முன்தினம் மாலை தெருமுனையில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு குப்பைக் கொட்டிவிட்டு வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST