தமிழ்நாடு

tamil nadu

சென்னை மேடவாக்கம் எலக்ட்ரிக் குடோன் தீ விபத்து

ETV Bharat / videos

மேடவாக்கத்தில் எலக்ட்ரிக்கல் கிடங்கில் தீ விபத்து! - latest news today in tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 7:05 AM IST

சென்னை:சென்னை மேடவாக்கம் விமலா நகர், 4வது குறுக்கு தெருவில், எலக்ட்ரிகல்ஸ் பொருள் வைக்கும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இது குறித்து  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேடவாக்கம், துரைப்பாக்கம், வேளச்சேரியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, தீயை அணைக்க முயன்றபோது புகை மண்டலத்தால் உள்ளே செல்ல முடியாமல் திணறினர்.  பின்னர், பல மணி நேரம் போராடி புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். கிடங்கு மூடப்பட்டிருந்த நிலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருகலாம் என கூறப்படுகிறது. 

ஒரு தளம் கொண்ட கட்டடத்தில் இருந்து புகையை வெளியேற்றிய பின்னரே, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். மூடப்பட்டிருந்த கிடங்கு என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டுள்ளது. இருப்பினும், எலக்ட்ரிகல்ஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பலருக்கும் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details