தமிழ்நாடு

tamil nadu

பாஜக பொதுச் செயலாளர் மது அருந்திய வீடியோவை வெளியிட்ட நபரைத் தாக்கும் வீடியோ

ETV Bharat / videos

பாஜக பொதுச் செயலாளர் மது அருந்திய வீடியோ விவகாரம்;வெளியிட்ட நபரைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள்! - rajesh

By

Published : Aug 1, 2023, 12:33 PM IST

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக உள்ளவர் எஸ்.சுப்பையா இவர் நங்கநல்லூரில் கட்சி அலுவலகம் மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஹோட்டலில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திவிட்டு போதையில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது. 

இதனை சமூக வலைதளத்தில் பார்த்த சுப்பையா அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர் சுப்பையா, மற்றும் பாஜக மண்டல தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங், சுப்பையாவின் சகோதரி மகன் முத்தரசன் ஆகியோர் சென்னை கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷை நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ராஜேஷை வெளியே அழைத்து தாங்கள் மது அருந்துவது போன்ற படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது எனக் கூறி அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தபோது சட்டையை பிடித்து இழுத்து அடித்து உள்ளனர். 

மேலும், ராஜேஷை தாக்கிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காவலரை பார்த்து அடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து ராஜேஷ் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொறுத்தியுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details