தமிழ்நாடு

tamil nadu

புதன் ஸ்தலமான திருவெண்காட்டில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது!!

ETV Bharat / videos

'புதன்' ஸ்தலமான திருவெண்காடு கோயில் தேரோட்டம்! - Thiruvengadu

By

Published : Mar 12, 2023, 4:05 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் கொண்டு இங்குச் சிவன் அகோர மூர்த்தியாகத் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், நவகிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா, கடந்த வாரம் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். 

இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற மார்ச் 15ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

முன்னதாக தேரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதையும் படிங்க: பொய் வழக்கு பதிவு செய்த 4 காவலர்களுக்கு விதித்த தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details