திங்களூரில் நடந்த சிறப்பு வழிபாடும் சந்திரயான் 3 வெற்றியும்!
தஞ்சாவூர்:சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயிலான திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் இன்று (ஜூலை 14) சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
மேலும், தேசிய கோயில்களின் கூட்டமைப்பால் 'சந்திர பிரித்தி ஹோமம்' ஏற்பாடு செய்யப்பட்டது. கைலாசநாதர் மூலவர் சந்நிதி முன் பல்வேறு வகையான யாகசாலைகளைக் கொண்டு சிவாச்சாரியார்கள் சந்திரபிரித்தி ஹோமம் நடத்தினர். யாகம் முடிந்ததும் 'சந்திரனுக்கு' விபூதி, திரவியம் பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சந்திரயான் 3 வெற்றிபெற பிரார்த்தனை செய்தனர்.
மேலும், இக்கோயிலானது நவக்கிரக தலங்களில் இரண்டாவது தலமாக விளங்குகின்ற கோயிலாகும். கைலாசநாதர் இங்கு வந்து சந்திரனை வழிபட்டு தோஷம் நீங்கியதாக ஐதீகம். பங்குனி உத்திரத்தன்று சூரிய ஒளியும் மறுநாள் சந்திர ஒளியும் சிவலிங்கத்தின் மீது படும் தனிச்சிறப்பாகும். மேலும், குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை அன்னப்பிரசானம் என்பர். வசதி படைத்தவர்கள் குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் இந்த சடங்கை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் அன்னப்பிரசானத்திற்கு மிக சிறந்த தலமாக கைலாசநாதர் கோயில் விளங்குகிறது.
இதையும் படிங்க:chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திரயான் - 3 குறித்த முழு விபரம்!