இந்த விநாயகர் சதுர்த்திக்கு இது புதுசு.. சென்னையை கலக்கி வரும் சந்திரயான் விநாயகர்..! - கிழ்கட்டளை
Published : Sep 18, 2023, 3:57 PM IST
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று (செப். 18) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதுர்த்தியிலும், ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை வைத்து விநாயகர் சிலையை வடிவமைப்பது வழக்கம்.
அந்த வகையில் சென்னை கிழ்கட்டளை பகுதியில், சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் சந்திரயான் விநாயகர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயிலின் இரு புறமும், தென்னை ஓலைகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தேங்காய்களை வைத்து, அலங்கார வளைவுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் தருணத்தில், சந்திரயான் விநாயகர் அமைத்து வழிபாடு நடத்திய இந்த புதிய முயற்சியை, ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:ரூ.750 கோடி வசூலை நெருங்கும் ஜவான்! பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தும் "பாலிவுட் பாட்ஷா"!