தமிழ்நாடு

tamil nadu

இறுதி போட்டியை காண சென்னை வந்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்

ETV Bharat / videos

Asian Championship Hockey final: இறுதி போட்டியை காண சென்னை வந்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்!

By

Published : Aug 12, 2023, 6:09 PM IST

சென்னை: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்து உள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சரை ஹாக்கி இந்தியா அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இன்று கொணடாடப்படும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு வாழ்துகளை தெரிவித்தார். இந்த நாளில் இளைஞர்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக உழைக்கப் பாடுபடுவோம் என்றும், 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றும் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தான் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியை காண வந்து உள்ளதாகவும், இந்திய ஹாக்கி அணி இதுவரை ஆடிய ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details