ரம்ஜான் பண்டிகை: சேலம் முழுவதும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை - ரம்ஜான் பண்டிகை
சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை இன்று (மே.3) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதேபோல சேலம் டவுன் ஜாமியா பள்ளிவாசல், சன்னியாசிகுண்டு, அஸ்தம்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST