தமிழ்நாடு

tamil nadu

மூன்று மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை மணப்பாறையில் இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர்

ETV Bharat / videos

மூன்று மாநிலத்தில் பாஜக வெற்றி! மணப்பாறையில் இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்..! - வடக்கு மண்டல பொறுப்பாளர் சதீஷ்குமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 7:41 PM IST

திருச்சி:மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 30ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிந்தன. அதனைத் தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் பரபரப்பாக தொடங்கி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று முடிவுகள் அறிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அறுதி பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதன் வெற்றியை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மணப்பாறை பகுதியில் நகரத் தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன், வடக்கு மண்டல பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் மணப்பாறை சட்டமன்ற பார்வையாளர் சி.ராஜேந்திரன் முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மணப்பாறை பேருந்து நிலையம் மற்றும் பொத்தமேட்டுப்பட்டி நேரு சிலை அருகில் பட்டாசு வெடித்தும், அவ்வழியே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, கையில் கொடியேந்தி பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தோடு மூன்று மாநில தேர்தல் வெற்றியை உற்சாகத்தோடு கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

...view details