ஓவியத்தின் மீது தீராத காதல் - 90 வயதை தாண்டியும் தொடர்கிறது! - 90 years old woman Painting
கோழிகோடு: கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி அம்மலுகுட்டி அம்மா, ஓவியத்தின் மீது கொண்ட காதலால் தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வரைந்து வருவது காண்போரை நெகிழச் செய்கிறது. தன் எண்ணத்தில் உதிக்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வரும் அம்மலுகுட்டி அம்மா, தன் வீடு முழுக்க ஓவியங்களை வரைந்து குவித்துள்ளார். 10 பிள்ளைகளுக்கு தாயான அம்மலுகுட்டி அம்மா தன் ஓய்வு நேரங்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST