CCTV Video: பெண் மீது மோதிய அரசு பேருந்து; பதைபதைக்க வைத்த காட்சி! - தமிழ்நாடு அரசு பேருந்து
திண்டுக்கல்: நத்தம் பகுதியிலிருந்து முளையூர் செல்லும் அரசு பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய போது பிச்சையம்மாள் என்பவர், தனது மருமகள் சமிமா உடன் தங்களது ஊருக்கு செல்லும் பேருந்தை பிடிக்க சென்று கொண்டிருந்த போது பிச்சையம்மாள் மீது அரசு பேருந்து ஒன்று மோதி பேருந்தின் முன் சக்கரம் அவர் மீது ஏறி, இறங்கியது.
இந்த கோர விபத்தில் பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த நத்தம் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிச்சையம்மாள் மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.