தமிழ்நாடு

tamil nadu

அயனாவரத்தில் சொகுசு பைக் அபேஸ்.. வெளியான சிசிடிவி!

ETV Bharat / videos

அயனாவரத்தில் சொகுசு பைக் அபேஸ்.. வெளியான சிசிடிவி! - Chennai news

By

Published : Mar 16, 2023, 7:37 PM IST

சென்னையை அடுத்த அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் கிருஷ்ணகுமார் (28) என்பவர் வசித்து வருகிறார். டிப்ளமோ பட்டதாரியான இவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதி நவீன சொகுசு பைக் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) அன்று இரவு வழக்கம்போல் தனது வீட்டின் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு உறங்கச்சென்றுள்ளார். 

இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது, தனது பைக் காணாமல் போய் இருப்பதைக் கண்டு கிருஷ்ணகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமார் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அயனாவரம் காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனிடையே பாதிக்கப்பட்ட கிருஷ்ணகுமார், தனது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதில், டியோ பைக்கில் வந்த இரண்டு பேர் முதலில் அந்த பகுதியில் யாரேனும் இருக்கின்றனரா என்று பார்க்கின்றனர். அதன் பின்பு சென்று விடுகின்றனர். தொடர்ந்து அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கிருஷ்ணகுமார் பைக்கின் சைட் லாக்கை உடைத்து, உடனடியாக அந்த பைக்கை ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அயனாவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details