பேக்கரியில் குடிபோதையில் தகராறு; சிசிடிவியில் சிக்கிய கும்பல்! - பேக்கரியில் தகராறு செய்த சிசிடிவி காட்சி
கும்பகோணம்:காரைக்கால் செல்லும் முக்கிய சாலையில் உள்ள முத்தய்யாபிள்ளை மண்டபம் பகுதியில், இராமசாமி என்பவர் விஜயலட்சுமி பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அருகேயுள்ள முல்லை நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அடைமானமாக வைத்து பேக்கரி உரிமையாளர் இராமசாமியிடம் 40 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றுள்ளார்.
இதுவரை 30 ஆயிரம் ரூபாய் வரை திருப்பி செலுத்திய நிலையில், தனது இரு சக்கரத்தைத் திரும்பத் தரும்படி கேட்டுள்ளார். மீதம் உள்ள ரூ 10 ஆயிரத்தைக் கொடுத்தால் தான் வாகனத்தை திரும்பத் தருவதாக இராமசாமி உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், அவரது நண்பர் மணிவண்ணனுடன் இணைந்து குடிபோதையில் பேக்கரியின் கண்ணாடி போன்றவைகளை உருட்டுக் கட்டைகளால், அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது, இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீது பேக்கரி உரிமையாளர் இராமசாமி, நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பேரின் அடிப்படையில் போலீசார் வெங்கடேசன் மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து அவர்கள் மீது வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.