கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியில் மோதி விபத்து! - கண்டெய்னர் லாரி மோதி விபத்து
திருப்பத்தூர்:கர்நாடக மாநிலம், பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர், நரசிம்மன். இவர் தனது மனைவியுடன் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பெங்களூருவில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த கார் ஆம்பூர் சான்றோர்குப்பம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்புகள் மீது மோதி சாலையின் எதிர் திசையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் வினோத் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் நகர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:Chennai Local Train: விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர் ரயில் மோதி பலி!