காவிரி புஷ்கர துலாக் கட்டத்திற்கு வந்த காவிரித்தாய் - மலர்த்தூவி வரவேற்ற மண்ணின் மைந்தர்கள்! - Cauvery water
மயிலாடுதுறை: மேட்டூரில் திறக்கப்பட்ட 'காவிரி நீர்' இரவு கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு காவிரி விகரமன் ஆறுகளின் தலைப்பு பகுதி கதவணைக்கு வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து, விநாடிக்கு 800 கன அடிநீர் திறந்து விடப்பட்டது. இந்தக் காவிரி நீரானது இன்று (ஜூன்1) மதியம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற புஷ்கர காவிரி துலா கட்டத்தை வந்தடைந்தது.இந்த காவிரி துலாக்கட்டத்தில் மயிலாடுதுறை சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு வாய்ந்த காவிரி துலாக் கட்டத்திற்கு வந்த காவிரி நீரை துலாக்கட்ட பாதுகாப்பு கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் பொங்கி வந்த காவிரி நீரை, ’காவிரித் தாயே வருக வருக, காவிரி அன்னையே வருக வருக’ எனக்கூறி மலர்த்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST