ஸ்வீட் கடையில் லாவகமாக லட்டு சாப்பிட்ட பூனை - வைரல் வீடியோ! - thanjavur
தஞ்சாவூர்: திருவையாறு ஓடத்துறை தெருவில் உள்ள இனிப்பகம் ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று பூனை ஒன்று கடைக்குள் சென்று இனிப்புகளை சுவைத்தது. இதனை பார்த்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். மேலும் இனிப்பு வாங்க சென்றவர்கள் இது குறித்து கேட்டபோது கடையின் உரிமையாளர் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பூனை இனிப்புகளை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST