Video: கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை - விவசாயிகள் பெரும் நஷ்டம்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைக்கிராமங்களில் தற்போது அதிக அளவில் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அறுவடை காலத்தில் கேரட் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக கூறுகின்றனர். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கூட அடைக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே, பாதிப்பு அடைந்த கேரட் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST