சிசிடிவி: பெரும் விபத்தில் குழந்தை உடன் உயிர் தப்பிய 4 பேர் - Kerala car accident video
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பாலுச்சேரி சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் தடுப்புச்சுவரில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் குழந்தை உடன் இருந்த 4 பேரில் பெண்ணொருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. சக வாகனவோட்டிகள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர்கள் கத்திப்பாரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், கினாலூரில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, விபத்து ஏற்பட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது, அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருப்பது தெரியவருகிறது.