தமிழ்நாடு

tamil nadu

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ETV Bharat / videos

Video: சாலையில் சென்ற கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு! - fire accident

By

Published : Jun 8, 2023, 4:34 PM IST

நீலகிரி: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சரண் கிஷோர். இவரது நண்பர்களான வசீகரன், ஜெகதீஷ் ஆகியோர் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கேஸ் பங்கில் காருக்கு கேஸ் நிரப்பிவிட்டு குன்னூர் சாலை வழியாக உதகை சென்று கொண்டிருந்தனர். அப்போது முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் கார் சென்று கொண்டிருந்த நிலையில் காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சரண் கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் காரை விட்டு உடனடியாக இறங்கியுள்ளனர். பின்னர் மளமளவென கார் தீப்பற்றி எரியத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் விபத்துக்கு குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உணவக பார்க்கிங்கில் நுழைந்த  காட்டு யானைகள்: அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்...

ABOUT THE AUTHOR

...view details