video: திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு! - sundarapuram police station
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து ஜவுளி எடுப்பதற்காக கோயம்புத்தூர்க்கு காரில் வந்து கொண்டிருந்த போது, ஈச்சனாரி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர் ஜவுளி எடுப்பதற்காக நேற்று (ஜூலை 10) கோயம்புத்தூர் நோக்கி டெஸ்டர் காரில் வந்துள்ளனர். அப்போது ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வரத் துவங்கி ஊள்ளது. இதனைப் பார்த்த கார் ஓட்டுநர் உடணடியாக சுதாரித்து கொண்டு காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஊள்ளார். இதனையடுத்து உள்ளே இருந்த அனைவரும் கீழே இறங்கினார்கள்
பின்னர், காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது, அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் கார் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.