தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை மாட வீதிகளில் பலி பீடங்களை மீண்டும் அமைத்திடுக! - விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

ETV Bharat / videos

Tiruvannamalai : 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனத்தை ரத்து செய்க - விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை - thiruvannamalai mada veedhi

By

Published : Jul 5, 2023, 1:02 PM IST

திருவண்ணாமலை: உலகப் பிரசித்திபெற்ற அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

அப்போது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டு வர உள்ள 300 ரூபாய் கட்டணத்தில் தரிசனம் செய்யும் இடைநிறுத்த தரிசனத்தை ரத்து செய்யக் கோரியும், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், உள்ளூர் பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளதாகவும், எனவே அவர்களுக்கு என தனி வரிசை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். 

மேலும், மாட வீதிகளில் சுற்றி அகற்றப்பட்ட பலி பீடங்களை மீண்டும் அதே இடத்தில் அமைக்கக் கோரியும், பக்தர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில் கட்டண தரிசன டிக்கெட்டை ரத்து செய்யக் கோரியும், திருக்கோயிலில் ஆகம விதிப்படி பிரசாதங்களை தயார் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.  

ABOUT THE AUTHOR

...view details