மணக்கரையில் அனல் பறந்த மாட்டுவண்டி பந்தயம்! - மலைப்பார்வதி அம்மன் கோயில் திருவிழா
தூத்துக்குடி: ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டிகள் பந்தயம் இன்று (பிப். 8) நடந்தது. இதனைப் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிக்காக மணக்கரையில் இருந்து வல்லநாடு வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.