ஜெயலலிதா 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்! - லெட்சுமிபுரம்
புதுக்கோட்டை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லெட்சுமிபுரம் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே. வைரமுத்து தலைமை வகித்தார்.
இதில் திருச்சி, மதுரை, தேனி, உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரியமாடு பிரிவில் 6 ஜோடிகள் கலந்து கொண்டது. சிறிய மாடு பிரிவில் 12 ஜோடிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.