தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்களை கவர்ந்த புல்லட் அம்மன்

ETV Bharat / videos

Theni - தேனி பொதுமக்களைக் கவர்ந்த புல்லட் அம்மன்! - bullet amman

By

Published : Jul 22, 2023, 5:45 PM IST

Updated : Jul 22, 2023, 7:17 PM IST

தேனி: தேனியில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலிலுள்ள அம்மன் புல்லட் பைக்கில் எழுந்தருளி வித்தியாசமான முறையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். புல்லட் பைக்கில் எழுந்தருளி இருக்கும் அம்மனை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். 

தேனி நகரில் சமதர்மபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் உற்சவ அம்மனாக காட்சியளிக்கும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக புல்லட் பைக்கின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும், அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதே போல் மூலவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி, ஆபரணங்கள் அணிந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் மேல் பண மழை பொழிவது போன்று ரூபாய் நோட்டுகளை செடிகள் மீது, வைத்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். 

இந்த முத்துமாரியம்மன் கோயிலில் வித்தியாசமான முறையில் அலங்கரித்து இருந்தது பொதுமக்கள் பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. பின்னர், முத்துமாரி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜைகள் செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Last Updated : Jul 22, 2023, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details