Video: வாகனங்களை ஆக்ரோஷமாய் முட்டித்தூக்கும் காட்டெருமை! - காட்டு எருமை
நீலகிரி மாவட்டத்திலுள்ள குடியிருப்புப்பகுதிக்கு வரும் வன விலங்குகளால் பொதுமக்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. வன விலங்குகளால் பொது மக்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி டானிங்டன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஆக்ரோஷத்துடன் கொம்பினால் தூக்கி, சிறிது தூரம் இழுத்து வந்து சேதபடுத்தியது, காட்டெருமை. மேலும் அருகில் இருந்த 3 இருசக்கர வாகனங்களையும் உடைத்தது. இந்த காட்சிகள் அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காட்டெருமை வாகனத்தை முட்டி சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST