கீழ்பெண்ணாத்தூர் அம்புஜவல்லி கோயிலில் 27 ஆண்டுக்கு பிறகு பிரம்மோற்சவம்! - etvbharat tamil
திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் பத்தாம் நாள் தெப்பல் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஊராட்சி மன்ற தலைவர் சீதா மோகன் தலைமையில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வுகளான தேர் வீதி உலா கடந்த 13 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்துத் தேர் இழுத்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
அதனைத் தொடர்ந்து 10 ஆம் நாளான நேற்று உற்சவம் மூர்த்தியான ஆதிகேசவ பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூதமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் குளத்தில் தெப்பலில் உற்சவ மூர்த்தி ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து குளக்கரையை 3 முறை வலம் வந்து தெப்பல் உற்சவம் நடைபெற்று பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.