தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி இயக்கப்படவில்லை

ETV Bharat / videos

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி இயக்கப்படவில்லை - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் - படகு சவாரி

By

Published : Mar 26, 2023, 3:54 PM IST

நீலகிரிமாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள மினி படகுகள் இயக்கப்படாமல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சுற்றுலா நகரமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை அதிகளவு கண்டு ரசித்துச் சென்று வருகின்றனர். 

ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சிம்ஸ் பூங்கா ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளதால் சிம்ஸ் பூங்காவில் உள்ள மினி படகுகள் இயக்கப்படவில்லை. இதனால், விடுமுறை நாளான இன்று ( மார்ச் 26 ) ஞாயிற்றுக்கிழமை குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு குழந்தைகளுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க:குழந்தைகள் - பெரியவர்களுக்கு இலவச துணி வழங்கிய தன் ஆர்வலர்கள்: மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம்!

ABOUT THE AUTHOR

...view details