பைக் இன்ஜினில் புகுந்த கருநாகம்.. வெளியே வராமல் நீண்ட நேரம் விளையாட்டு காட்டிய வீடியோ வைரல்! - 1 அடி கருநாகம்
Published : Oct 26, 2023, 10:28 AM IST
|Updated : Oct 27, 2023, 6:24 AM IST
திண்டுக்கல்: பெண்கள் அரசு கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருந்தபோது, 1 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பின் குட்டி ஸ்டேரிங் மீது ஏறி சீறியுள்ளது. அதைக் கண்டதும் வாகனத்தை கீழே போட்டு, இருவரும் ஓடியதாக கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர், இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு அடி நீளம் கொண்ட கருநாகப் பாம்பு நீண்ட நேரம் விளையாட்டு காட்டியுள்ளது. அதனால், இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை பிடிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பு பிடிபட்டுள்ளது.
அப்போது அருகிலுள்ள திண்டுக்கல் - கரூர் இணைப்பு மேம்பால சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனத்தை ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறையினர் பாம்பை மீட்பதை வேடிக்கை பார்த்தனர். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.