தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலைக்கு புகழேந்தி பதிலடி

ETV Bharat / videos

ஜெயலலிதாவை விமர்சித்தால் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும் - புகழேந்தி

By

Published : Mar 10, 2023, 10:34 PM IST

ஒசூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்மையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமது தாய் ஜெயலலிதாவை விட 100 மடங்கு பலம் வாய்ந்தவர் என்றும், தனது மனைவி ஜெயலலிதாவை காட்டிலும் ஆயிரம் மடங்கு பலமானவர் என்றும் கூறினார். இந்த கருத்து அதிமுக மற்றும் பாஜக  இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது அவர் கூறுகையில், "அண்ணாமலைக்கு என்ன ஆகி விட்டது என தெரியவில்லை. ஜெயலலிதாவை அவரது தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசும்படி அவரை யார் கேட்டது? தமிழ்நாட்டில் பணியாற்றும் காவலர்கள் இன்று வரை ஜெயலலிதாவை தெய்வமாக பார்க்கின்றனர்.  

ஜெயலலிதாவை பற்றி விமர்சித்து பேசிய விவகாரம், கர்நாடகாவில் பரவினால் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும். அங்குள்ள தமிழர்கள் மதிக்கவே மாட்டார்கள். மத்தியில் பாஜகவை ஆட்சியில் அமர வைத்தும், இறக்கியவரும் ஜெயலலிதா தான். அண்ணாமலை பண்பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு நாவடக்கம் மிகவும் அவசியம்.  

அதிமுக கட்சிக்குள் பல பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பற்றி பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது. அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து அமித்ஷாவிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். வாய்க்கு வந்தபடி அண்ணாமலை பேசக்கூடாது. இது அவருக்கு கடைசி எச்சரிக்கை. எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி இனி பேசினால் அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒருங்கிணைப்பாளர் இல்லாமல், அதிமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது" என கூறினார்.  

இதையும் படிங்க: இதுவரை விவசாயிகளுக்கு ரூ.12,679 கோடி கடனுதவி - அமைச்சர் பெரியகருப்பன்

ABOUT THE AUTHOR

...view details