அஸ்ஸாம் வெள்ளப்பேரழிவு - குறைந்த அளவு நீரில் இறங்காமல் ஊழியர் முதுகில் ஏறிய பாஜக எம்.எல்.ஏ - லும்டிங் சட்டப்பேரவை உறுப்பினர் சிபு மிஸ்ரா
அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளப்பேரழிவு காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாஜக லும்டிங் சட்டப்பேரவை உறுப்பினர் சிபு மிஸ்ரா, பாதிக்கப்பட்ட பகுதியான ஹோஜாய்க்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது குறைந்த அளவு நீரே சாலையில், இருந்த நிலையில், நீரினுள் இறங்காமல் சிபு மிஸ்ரா மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் (எஸ்டிஆர்எஃப்) ஊழியர் ஒருவரின் முதுகில் ஏறி, உப்புமூட்டையாக சென்றார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த அட்ராசிட்டி வீடியோ வைரல் ஆகி வருகிறது. அஸ்ஸாமில் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 27 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST