தமிழ்நாடு

tamil nadu

ஓசூருக்கு வந்த 'வந்தே பாரத்' ரயிலை மலர் தூவி கொண்டாடிய பாஜகவினர்

ETV Bharat / videos

ஓசூருக்கு வந்த வந்தே பாரத் ரயில்….மலர் தூவி வரவேற்ற பாஜகவினர்! - மோடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 8:04 PM IST

கிருஷ்ணகிரி:கோவை - பெங்களூர் இடையே இன்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை, ஓசூர் வந்ததால் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி, கோவை - பெங்களூர் இடையேயான ரயில் உள்பட ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி வாயிலாக இன்று (டிச.30) தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 4வது வந்தே பாரத் ரயிலாக கோவை - பெங்களூர் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

முதல் பயணமாக கோவையிலிருந்து - பெங்களூர் நோக்கி ஓசூர் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு, ஒசூர் பாஜகவினர் பாஜக கொடிகள் மற்றும் தேசியக்கொடியை அசைத்து மலர் தூவி வரவேற்றனர். மேலும், ஓசூர் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலினை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 500க்கும் அதிகமானோர் குவிந்து தங்களது செல்போன்களில் படம் பிடித்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details