தமிழ்நாடு

tamil nadu

நூதன முறையில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய பாஜக உறுப்பினர்

ETV Bharat / videos

"என்று முடியும் பணி?.. எப்போது விடியும் இனி?" - நூதன முறையில் பாஜக கவுன்சிலர் கோரிக்கை! - தமிழ்நாடு செய்திகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 12:36 PM IST

திண்டுக்கல்மாநகராட்சியில் மாமமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. அதில் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த மாநகராட்சி 14வது வார்டு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் தனபால், தனது 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பல மாதங்களாக கண்டு கொள்ளவில்லை எனவும், பணிகளை வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடரந்து, தனது பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் எப்போது முடித்துக் கொடுக்கப்படும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், மாநகராட்சி கூட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் “என்று முடியும் பணி?.. எப்போது விடியும் இனி?” என பிரச்சனைகளை புகைப்படமாக பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட் அணிந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதாவது அந்த டிஷர்ட்டில், 14வது வார்டு பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடுகள் பாதாள சாக்கடை வழிந்து ஓடியது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. 

ABOUT THE AUTHOR

...view details