தமிழ்நாடு

tamil nadu

பாஜக உறுப்பினர் மீசை எடுத்து நூதன போராட்டம்

ETV Bharat / videos

கோவில்பட்டியில் பாஜக கவுன்சிலர் மீசை எடுத்து நூதன போராட்டம்! - கோவில்பட்டி நகராட்சி

By

Published : Feb 14, 2023, 10:34 AM IST

தூத்துக்குடி:கோவில்பட்டி நகராட்சி 20-ஆவது வார்டு பாஜக நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார். இவர் தனது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டி இடித்துவிட்டும் தற்போது வரை குடிநீர் தொட்டி அமைக்கப்படாமல் இருப்பதாகவும், தெருக்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்து நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், நகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை எனக் கூறி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் ஒரு பகுதியாக தனது மீசையை எடுத்ததது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details