தாம்பரத்தில் வீட்டின் முன்பு நின்ற பைக் திருட்டு.. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை! - crime news in tamil
Published : Jan 10, 2024, 9:11 PM IST
சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் தாம்பரம் சானடோரியம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்துவிட்டு, இரவு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று (ஜன.10) காலை பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்து உள்ளார். அப்போது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மோகன் அங்க பொருத்தப்பட்டு இந்த சிசிடிவி கேமரா பார்க்கும் போது அதி காலையில் மர்ம நபர் ஒருவர் நடந்து வந்து இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இதனைத் தொடந்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.