CCTV:ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது அதிவேகமாக மோதிய கார் - காவலர்கள் மீது மோதிய கார்
மத்தியப்பிரதேச மாநிலம், போபால் நாராயண் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள் தரம்ராஜ் மெஹ்ரா மற்றும் ராகேஷ் மெஹ்ரா மற்றும் இரண்டு காவலர்களை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த தரம்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரை காவல் துறையினர் கைப்பற்றிய நிலையில் ஓட்டுநரைத்தேடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST