Video: கோத்தகிரி சாலையில் 2 குட்டிகளை முதுகில் சுமந்தபடி உலா வந்த தாய் கரடி! - நீலகிரி மாவட்ட செய்திகள்
நீலகிரி: கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் இன்று கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையில் தாய் கரடி உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST