வீடியோ: நீலகிரியில் போலீசார் ரோந்து வாகனத்தை வழிமறித்த கரடி - நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்மைக்காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி டானிங்டன் சாலையில் காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது போலீசாரின் ஜீப்பை வழி மறித்த ஒற்றைக்கரடி சிறிது நேரம் சாலையின் குறுக்கே நின்றது. அதன்பின் அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST