ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை
தர்மபுரி: தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை திடீரென 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
தர்மபுரி மாவட்ட செய்திகள்