தமிழ்நாடு

tamil nadu

குற்றால மெயின் அருவியில் பாதிப்புகளை சரி செய்யும் பணி தீவிரம்.. 4வது நாளாக குளிக்க தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 11:57 AM IST

குற்றால மெயின் அருவியில் பாதிப்புகளை சரி செய்யும் பணி தீவிரம்

தென்காசி:தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால், குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தென்காசி மாவட்ட பகுதியில் அதிகப்படியான மழை இல்லாததால், மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதையடுத்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள் மற்றும் மரத்துண்டுகளால் மெயின் அருவி பகுதியில் இருந்த சுற்றுச்சுவர், தரை கற்கள் ஆகியவை சேதமடைந்தன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சுத்தம் செய்து சரி செய்யும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. மேலும், மழையின் தாக்கம் அவ்வப்போது இருந்து வருவதால் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நான்காவது நாளாக இன்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.  

இருப்பினும் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், மெயின் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். மேலும், மெயின் அருவியில் இன்று நீர் வரத்து சற்று குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதியில் வந்து செல்பி எடுத்து சென்று வருகின்றனர்.  

ABOUT THE AUTHOR

...view details