தமிழ்நாடு

tamil nadu

பேர்ணாம்பட்டு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 750 வாழை மரங்கள் சேதம்

ETV Bharat / videos

அறுவடைக்கு தயாராக இருந்த 750 வாழை மரங்கள் யானையின் அட்டகாசத்தால் சேதம்! - 750 வாழை மரங்கள் சேதம்

By

Published : Jul 31, 2023, 11:19 AM IST

வேலூர்:வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த குண்டலபள்ளி, ரங்கப்பேட்டை, ஜெங்குமூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் காட்டை ஒட்டியே உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக யானைகள் மற்றும் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து வருவது வழக்கம். அவ்வாறு வருகையில் அவ்வப்போது விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. 

இந் நிலையில் ஜெங்குமூர் கிராமத்தில், ராஜ்குமார் மற்றும் நரேஷ் பாபு ஆகிய இருவருக்கும் சொந்தமான விவசாய நிலங்களில் சுமார் 1500 வாழை மரங்கள் பயிரிட்டு வந்தனர். இவர்களின் விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த 750 வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளன. சேதமடைந்த வாழை மரங்களை பார்த்து, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இதுகுறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களுக்குள் யானைகள் மற்றும் வனவிலங்குகள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details