Video: கற்கை நன்றே... குதிரை மீது சென்றாவது கற்பது நன்றே எனும் மாணவர் - கைர்லாஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளி
மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த லலித் கைர்லாஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுவன் தங்கி இருக்கும் நானிஹாலில் இருந்து தினமும் 4 கி.மீ., தூரம் சாலை இல்லாத பாதையில் செல்ல வேண்டியதால், சிறுவனின் தாத்தா வைத்திருந்த குதிரையில் தினமும் பள்ளி சென்று வருகிறார். இதனை கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். மேலும் சிறுவன் லலித்தின் படிக்கும் ஆர்வத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST