120 அடி நிரம்பியுள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதி கழுகுப்பார்வையில்...! - மேட்டூர் அணை
தர்மபுரி: மேட்டூர் அணை சென்ற வாரம், அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், அணையில் 120 அடி தண்ணீர் நிரம்பியது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டால் அதனுடைய நீர்த்தேக்கப்பகுதி தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஏரியூர் பகுதி வரை பரந்து காணப்படும். மேட்டூர் அணைப் பகுதியிலிருந்து தர்மபுரி மாவட்டம், ஏரியூா் பகுதிவரை தண்ணீர் நிரம்பி பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. அணையில் நீர் கொள்ளளவு அதிகமாக உள்ளதால் அதனுடைய நீர்த்தேக்கம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப்பகுதி வரை ஆறுகளில் நீர் தேங்கி நிரம்பியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST