திருவண்ணாமலை கோயிலில் ஆவணி அவிட்டம் நிகழ்வு - Thiruvannamalai Temple
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவணி மாதம் சிவாச்சாரியார்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலை மாற்றும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வானது ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை ஒன்பது முதல் பத்து முப்பது மணி அளவில் காலபைரவர் சன்னதி எதிரே உள்ள பிரம்ம தீர்த்த குளக்கரையில் நடைபெற்றது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலை மாற்றினர். ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் பிராமணர்கள் பூணூல் மாற்றுவது ஆகமத்தில் ஒரு பகுதியாக உள்ளது அதனை தொடர்ந்து பிரம்ம தீர்த்த குளக்கரையில் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் தங்களுடைய பிள்ளைகளையும் அழைத்து வந்து பூணூலை மாற்றினார்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST