தமிழ்நாடு

tamil nadu

சிஎம்சி மருத்துவமனை

ETV Bharat / videos

Video: வேலூர் சிஎம்சி மருத்துவமனை பாதுகாவலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்! - cmc hospital

By

Published : Jul 15, 2023, 8:32 PM IST

வேலூர்: வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையான சிஎம்சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நோயாளிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றிச் செல்வது வழக்கம். அப்படி கடந்த 13-ஆம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நோயாளியுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு வந்துள்ளார். 

அப்போது மருத்துவமனைக்கு வருகை தந்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் இந்த வழியாக ஆட்டோவில் வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர், பாதுகாவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், திடீரென ஆட்டோ ஓட்டுநர் பாதுகாவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பாதுகாவலர் பலத்தகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாரிடம் பாதுகாவலர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:Aarudhra Scam: ட்விட்டர் பதிவால் மாட்டிக்கொண்ட ஆர்.கே சுரேஷ்!

ABOUT THE AUTHOR

...view details