தமிழ்நாடு

tamil nadu

திரும்பி பார்க்க வைத்த திருமணம்...தாம்புல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள்...

ETV Bharat / videos

தாம்பூலப் பைக்கு பதில் சிறுதானிய லட்டுகள்.. கோவையை திரும்பிப் பார்க்க வைத்த தம்பதி!

By

Published : Mar 27, 2023, 3:50 PM IST

கோவை:திருமணம் என்பது சமூகம், சட்டம், உறவு முறைகள் கலந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும், இந்தியாவில் திருமணமானது குடும்பம், பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திருமணம் என்பது காலங்கள் மாறினாலும், அதன் சிறப்பும், பாரம்பரியமும் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

அந்த வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று எஸ்.பாரதி- வி.ஸ்ரீஜா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதிகள் இருவரும் ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் தாம்பூலத் தட்டுக்குப் பதிலாக, சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

திருமணம் முடிந்த உடன், அதில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தாம்பூலப் பை கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாம்பூலப் பைக்குப் பதிலாக சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன. இது திருமண வீட்டார், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இதில், கருப்பு கவுனி லட்டு, திணை லட்டு, பாசி பயிறு லட்டு, கேழ்வரகு லட்டு, நரிப்பயிறு லட்டு, கம்பு லட்டு, கடலை உருண்டை என ஏழு வகை சிறுதானிய லட்டுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் இது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், சிறுதானிய ஆண்டைக் குறிப்பிடும் விதமாகவும் மற்றும் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் இருப்பதற்காக வழங்கப்பட்டவை என திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது குறித்து மணப்பெண் ஸ்ரீஜா கூறுகையில், ''இவரது உறவினரான கவிதா(சித்தி) என்பவர், பழநி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஆவார். இவரது யோசனையின் படி தான் இந்த சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன. தற்போதுள்ள fastfood காலத்தில், ஆரோக்கியத்தை வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த சிறு தானிய லட்டுகளை வழங்கினோம்'' எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க:ஊட்டி பூங்கா பணியாளர்கள் ஒப்பாரி பாடலுடன் நூதன போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details